வாய் விட்டு சிரித்தால்...

நண்பர்களே, சிரிப்பு மனிதராசியின் ஆறாம் அறிவின் ஆதாரம்..முடிந்த அளவு சிரியுங்களேன்..... Change your Font Settings to UTF-8 to read the tamil letters here..[View->Encoding->UTF-8]

Name:
Location: Karaikudi, Tamilnadu, India

ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பதல்ல வாழ்க்கை! எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம். வாழக் கிடைத்த வாழ்க்கையில், ஒரு சிலருக்காவது வசந்தத்தின் முகவரியை அறிமுகம் செய்தோமேயானால் அதுவே வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!

Monday, May 22, 2006

முறைப் பொண்ணு

"அதோ போறாளே அவதான் என் முறைப் பொண்ணு!"

"உனக்கு அத்தையோ, மாமனோ இல்லையே அப்புறம் ஏது முறைப்பொண்ணு?"

"நான் பார்க்கிற போதெல்லாம் என்னை 'முறைச்சு'ப் பார்க்கிறாளே - அதைச் சொன்னேன்"

Sunday, May 21, 2006

தூக்க மாத்திரை


மனைவி : என்னங்க, டாக்டர் கொடுத்த மாத்திரையை சாப்பிட மறந்துட்டீங்களே?

கணவன் : மறக்கலைடி, தூங்கறதுக்கு முன்னாடி சாப்பிடச் சொன்னாரு.. ஆபீஸ் போன உடனே சாப்பிட்டுக்கறேன்....

குறுந்தகவல் # 5: 24 எறும்புகளும் ஒரு யானையும்

ஒருமுறை 24 எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

யானை ஆற்றில் குதித்தவுடன் 23 எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த மற்ற 23 எறும்புகளும் ஒரு சேரக் கத்தின.. "அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள...."

நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!

முதலிரவு அன்றே

பெண் 1: முதலிரவு அன்னிக்கே என் கணவரைப் பற்றி நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்
பெண் 2: எப்படி?
பெண் 1: அவரே பால் சொம்பைக் கழுவி, மெத்தை தலையாணி மடிச்சு வச்சார்...

Wednesday, May 17, 2006

குறுந்தகவல் # 4: இதே வருடம்....

வருடம் 1927
.
.
.
ஜூன் 15ம் தேதி
.
.
.
இரவு 10.45 மணி
.
.
.
.
பெருசா ஒண்ணும் நடக்கல... எல்லாரும் தூங்கினாங்க...
நீயும் போய்த் தூங்கு என்ன? ;-)


நன்றி1: செல்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!

நன்றி2: கைப்பேசியை விட செல்பேசி என்பது பொருத்தமான சொல் என்று கருத்துக்களைப் பகிர்ந்த இணையச் சகோதரர் திரு. உமாநாத் அவர்கட்கு!

Monday, May 15, 2006

குறுந்தகவல் # 3: இதயமும் செருப்பும்!?

பையன் : பெண்ணே என் இதயத்துக்குள் வா.

பெண் : செருப்பைக் கழட்டவா?

பையன் : லூசு! லூசு! என் இதயம் என்ன கோயிலா? அப்படியே வா!

நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!

குறுந்தகவல் # 2: தண்ணீரும் மின்சாரமும்

சர்தார்ஜி1: தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?

சர்தார்ஜி2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சுருமே....

நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!

குறுந்தகவல் # 1: பேய்கள் வகுப்பறையும் குட்டிச்சாத்தானும்

பேய்கள் வகுப்பறையில் attendance எடுக்கறாங்க..

மோகினி : உள்ளேன் அய்யா..
கொள்ளி வாய் : உள்ளேன் அய்யா..
காட்டேரி : உள்ளேன் அய்யா..
குட்டிச்சாத்தான் : ?
குட்டிச்சாத்தான் : ?
குட்டிச்சாத்தான் : ? ஏய் SMS படிக்காம attendance சொல்லு...

நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய குட்டிச்சாத்தான் (மன்னிக்கவும்...;-) தோழி) அர்ச்சனாவிற்கு!