வாய் விட்டு சிரித்தால்...

நண்பர்களே, சிரிப்பு மனிதராசியின் ஆறாம் அறிவின் ஆதாரம்..முடிந்த அளவு சிரியுங்களேன்..... Change your Font Settings to UTF-8 to read the tamil letters here..[View->Encoding->UTF-8]

Name:
Location: Karaikudi, Tamilnadu, India

ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பதல்ல வாழ்க்கை! எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம். வாழக் கிடைத்த வாழ்க்கையில், ஒரு சிலருக்காவது வசந்தத்தின் முகவரியை அறிமுகம் செய்தோமேயானால் அதுவே வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!

Thursday, August 23, 2007

நாய்ன்னு திட்டினது தப்பாப்போச்சு

நபர் #1: என் பையனை 'நாயே'ன்னு திட்டினது தப்பாப் போச்சு!
 
நபர் #2: ஏன்.. கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டுப் போயிட்டானா?
 
நபர் #1: அட இல்லீங்க.. எங்க வீட்டில இருந்த நாய் கோவிச்சுக்கிட்டு ஓடிப்போயிருச்சு!

Labels:

Tuesday, May 08, 2007

சர்தார்ஜியும் காபியும்

சர்தார் மனைவியிடம்: சீக்கிரம் இந்தக் காபியைக் குடித்து முடி!
சர்தார் மனைவி: ஏங்க இப்படி அவசரப்படுத்துறீங்க?
சர்தார் மனைவியிடம்: இப்பத்தானே நான் பாத்தேன்.. இந்த ஹோட்டல்ல ஹாட் காபி 5 ரூபாய்.. கோல்ட் (Cold) காபி 10 ரூபாயாம்...

 

Labels:

Tuesday, April 24, 2007

சர்தார்ஜியும் பயணநேரமும்

சர்தார்ஜி: மும்பைக்கும் புதுதில்லிக்குமான விமானப் பயணத்தின் நேரத்தைக் கூற முடியுமா?
பணிப்பெண்: ஒரு நிமிஷம்.. (இருங்கள் பார்த்துச் சொல்கிறேன்)
சர்தார்ஜி: ஓ.. அப்படியா.. இவ்வளவு துரிதமாகவா? நன்றி
எனக்கூறித் தொலைபேசியை அதனிடத்தில் வைத்துவிட்டார் ! ;-)

Labels:

Tuesday, April 17, 2007

சிறப்புக் கேள்வி

நபர் 1: உங்ககிட்ட ஒரு சிறப்புக் கேள்வி. அதுக்கு நீங்க 'தெரியும்', 'தெரியாது' இதுல ஏதாவது ஒண்ணு தான் பதிலா சொல்லணும்.

நபர் 2: சரிங்க.. அப்படி என்னங்க கேள்வி?

நபர் 1: நீங்க லூசுங்கறது உங்க வீட்ல இருக்கறவங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழன் சதீஷ்குமாருக்கு!

Labels:

பேருந்தில் அந்நியன்


அந்நியன்: ஏன்பா, இப்படி தினமும் பஸ்ல டிக்கட் எடுக்காம வர்றியே, இது தப்புன்னு உனக்குத் தெரியாதா?

உடனிருப்பவர்: முடியை விலக்கிட்டுப் பார்றா மூதேவி, நான் தான் பஸ்ஸோட டிரைவர்! ;-)

நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய நண்பன் முரளிகாந்தனுக்கு!

Labels: ,

Friday, February 23, 2007

என்ன துரோகம் செஞ்சேன்?

டேய்.. நான் உனக்கு என்னடா துரோகம் செஞ்சேன்..
என் என்னைக் கண்டாலே உனக்குப் பிடிக்கல?
எப்பவாவது ஒருதபா என்னைக் கண்டுக்கடா...
இதுக்கு மேல உன் இஷ்டம்..
நான் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல..
...
...
இப்படிக்கு,
..
...
..
..
உன் அன்பான,
டூத்பிரஷ்

சுமாரா எத்தனை பொண்ணுங்க..


கல்லூரி முதல்வர்: நம்ம கல்லூரியில் சுமாரா எத்தனை பொண்ணுங்க இருப்பாங்க?
மாணவர் தலைவன் : சார்.. நம்ம கல்லூரியில் எல்லாப் பொண்ணுங்களுமே சுமாராத் தான் இருப்பாங்க!

Labels: ,

Monday, November 20, 2006

குறுந்தகவல் #6: பொய்யும் உண்மையும்..

உறுத்தும் உண்மையை விட
ஆறுதலான பொய்யே மேல்...

உதாரணத்திற்கு..

நீ ரொம்ப அழகு... ;-)

நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!

Monday, May 22, 2006

முறைப் பொண்ணு

"அதோ போறாளே அவதான் என் முறைப் பொண்ணு!"

"உனக்கு அத்தையோ, மாமனோ இல்லையே அப்புறம் ஏது முறைப்பொண்ணு?"

"நான் பார்க்கிற போதெல்லாம் என்னை 'முறைச்சு'ப் பார்க்கிறாளே - அதைச் சொன்னேன்"